உக்ரைனை அடுத்து… புகையும் இன்னொரு போர்: பேரிழப்பே மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரிக்கை


தைவான் மீதான சீனாவின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் நிலையில் தற்போது அமெரிக்கா இல்லை என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்

தைவான் மீது போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், இரண்டாம் உலக போர் போன்ற மிக மோசமான சம்பவங்கள் நடந்தேறும் என்றார் சிறந்த வெளியுறவுக் கொள்கை நிபுணரான Michael O’Hanlon.

உக்ரைனை அடுத்து... புகையும் இன்னொரு போர்: பேரிழப்பே மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரிக்கை | War With China Over Taiwan Expert Warns

@AFP

தைவான் தீவை எந்த விலை கொடுத்தும் தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் காத்திருக்கிறார்.
மட்டுமின்றி, ராணுவத்தை அனுப்பியேனும் தமது கனவை நிறைவேற்ற அவர் தயாராகி வரும் நிலையில்,
உக்ரைன் போருக்கு அடுத்து தைவான் மீதான சீனாவின் படையெடுப்பு தொடர்பான தகவல்கள் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தான், சீனாவுக்கு எதிராக ஒரு போருக்கான தயார் நிலையில் அமெரிக்கா இல்லை எனவும், சீனாவும் தற்போதைய சூழலில் ஒரு போருக்கான முடிவில் இல்லை எனவும் Michael O’Hanlon தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் அமெரிக்கா போர்

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள போர்களின் மிகக் கொடூரமான பதிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா போர் இருக்கும் எனவும், இரண்டாம் உலக போரின் போது ஏற்பட்ட அதே நிலை ஏற்படும் எனவும் Michael O’Hanlon தெரிவித்துள்ளார்.

உக்ரைனை அடுத்து... புகையும் இன்னொரு போர்: பேரிழப்பே மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரிக்கை | War With China Over Taiwan Expert Warns

@AP

மேலும், தைவானில் அமெரிக்கா சீனாவை எதிர்த்துப் போரிட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்க மக்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய, பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

2027ல் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் நான்காவது முறையாக பொறுப்பேற்க இருக்கிறார்.
இதுவரை தமது ஆட்சி காலத்தில் சொல்லிக்கொள்ளும் எந்த சாதனையும் அவர் பெயரில் இல்லை.

இதனால், சீன மக்களின் கவனத்தை திசை திருப்ப, தைவான் மீது அவர் போருக்கு தயாராகலாம் என தெரிவித்துள்ளார் தைவான் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வூ.
மேலும், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை கடந்த ஆண்டு சீனா பதிவு செய்துள்ளது.

உக்ரைனை அடுத்து... புகையும் இன்னொரு போர்: பேரிழப்பே மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரிக்கை | War With China Over Taiwan Expert Warns

@AP

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் நான்காவது முறை பொறுப்பெடுத்ததும் அவர் தைவான் மீது போர் தொடுப்பார் என கூற முடியாது.
அடுத்த 10 ஆண்டுகளில் இப்படியான ஒரு நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே கடற்படை நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.