உதயநிதி ஸ்டாலினுக்கு வந்த பயம்; மக்கள் தந்த பரிசு… கோவை விழாவில் பெருமிதம்!

கோவை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட
திமுக
சார்பில் 2,000 மூத்த முன்னோடிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் பிளக்ஸ், பேனர்கள் வைக்க வேண்டாம்.

கோவைக்கு நலத்திட்டங்கள்

தங்களால் இயன்ற தொகையை இளைஞர் அணி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தாருங்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இருப்பினும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின், ஆறு முறை கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன் மூலம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அங்கேயே குடியிருந்தார்.

அதிமுக – பாஜக கூட்டணி

ஆனால் நம்முடைய முதலமைச்சர் ஒரு நாள் தான் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். தற்போது தேர்தல் முடிந்து விட்டது. அதிமுகவினர் ஒருவர் கூட வெளியில் வர மாட்டார்கள். பாஜகவின் கண் அசைவு இல்லாமல் அதிமுகவில் எதுவும் நடக்காது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விடுவார்களோ? என்ற பயம் இருந்தது. ஆனால் அந்த கூட்டணி உறுதியான பின்பு தான் நமது வெற்றியும் உறுதியானது.

420 அண்ணாமலை

அந்த அளவிற்கு பாஜகவை தமிழக மக்கள் வெறுக்கிறார்கள். இதுபோன்ற வெறுப்பு அரசியல் செய்தால் மக்கள் என்றென்றும் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்வோர் தனக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை. தனக்கு சீட்டு வழங்கவில்லை என்று தான் சொல்வார்கள். ஆனால் பாஜகவில் இருந்து விலகி சென்ற பொறுப்பில் இருந்த ஒருவர், அவரது கட்சி தலைவர் ஒரு 420, மன நலம் குன்றியவர் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஃபிளாஷ்பேக்

தற்போது தமிழர்களாகிய நாம் வட மாநிலத்தவர்களை விரட்டுகின்றோம் என பொய் பரப்புகிறார்கள். இதற்கு சரியான நேரத்தில் முதலமைச்சரும் மக்களும் பதிலடி தருவார்கள். திமுகவில் இளைஞர் அணி சார்பில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தினோம். அது திராவிட இயக்க வரலாறு மற்றும் மாநில சுய ஆட்சி என்ற இரு தலைப்புகளில் நடத்தப்பட்டது. மேலும் தற்போது ’ஃபிளாஷ்பேக்’ என்ற ஒன்றை துவக்கியுள்ளோம். அதில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உடன் எடுத்த புகைப்படங்களை மக்கள் அனுப்பி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

அதனை எல்லாம் பார்க்கின்ற போது தான் நம்முடைய வரலாறு எவ்வளவு நீண்ட வரலாறு எனத் தெரிகிறது. இத்தனை ஆண்டுகளாக கழகத்தைக் கட்டி நிற்பவர்கள் நீங்கள். உங்களுடைய பாத மலர்களை நான் தொட்டு வணங்குகின்றேன். இளைஞர்களாகிய எங்களை நீங்கள் வழிநடத்துங்கள். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதற்காக இன்றிலிருந்து நாம் செயல்படுவோம். இம்முறை 40க்கு 40 என வென்றெடுப்போம் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.