டெல்லி: கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணியதேவையில்லை என்று டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என்று டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் கூடவே பல நோய்களையும் கொண்டு வரும். ஆண்டின் மற்ற பருவங்களை விட கோடை காலத்தில் பல நோய்கள் பொதுவானவை. கோடைகாலத்தில் ஏற்பட கூடிய சில பொதுவான நோய்கள் உள்ளது.
இது தோலில் சிறிய, சிவப்பு புள்ளிகளாக தோன்றுகிறது மற்றும் சருமத்தில் ஒரு முட்கள் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வியர்க்குரு உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் அது பொதுவாக முகம், தொண்டை, முதுகு, மார்பு அல்லது தொடைகளில் ஏற்படுகிறது. இவை அதிகப்படியான வியர்வை வெப்ப சொறி ஏற்படுகிறது. இது பொதுவாக வெப்பமான, ஈரப்பதமான காலநிலையில் நிகழ்கிறது. இந்நிலையில் இந்த வியர்க்குரு அதிக அளவில் ஏற்படுவதால் வழக்கறிஞர்களின் நலன்களை கருத்தில் கொண்டு கருப்பு கவுன் அணிய தேவையில்லை என்றும் வெள்ளை சட்டை மற்றும் உரிய நெக் பேண்ட் வர அணிந்து டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது.