தங்கம் விலை குறைவு; வெள்ளி விலை உயர்வு..!!

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 1 ரூபாய் குறைந்து, ரூ.5,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, ரூ.42,000-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,301-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமில்லாமல், ரூ.4,301-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 70,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.70,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.