பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இன்று மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஊழல் வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் 2004 மற்றும் 2009 கால கட்டத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரது குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட நிலங்களுக்குப் பதிலாக ரயில்வேயில் பணி நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
டெல்லிக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி: அண்ணாமலைக்கு பிரஷர் – இனிமேல் இப்படி தானா?
பாட்னாவில் உள்ள முன்னாள் முதல்வரின் வீட்டுக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியாக உள்ளன.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, நில மோசடி வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் 14 பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் குற்றம் சாட்டப்பட்டவர்களை மார்ச் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.