சீனாவின் Xiaomi நிறுவனம் இந்தியாவில் அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான
Xiaomi 13 Pro விற்பனையை
இன்று மார்ச் 6 தொடங்குகிறது. இந்த போனில் மூன்று 50MP கேமரா வசதி இடம்பெறுகிறது. இந்த போனிற்காக மிகப்பெரிய கேமரா நிறுவனமான Leica உடன் Xiaomi நிறுவனம் இணைந்துள்ளது.
இந்த போன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் 79,999 ஆயிரம் ரூபாய் விலையில் உள்ளது. இதன் ஆரம்பகால விற்பனை சலுகையாக ICICI வங்கி மூலமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை உடனடி சலுகைகள் கிடைக்கும். இதனால் இந்த போனை நாம் 69,999 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கமுடியும்.
இதில் நமது பழைய போன்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் விற்பனை மார்ச் 6, மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த போனை நாம் MI.com, Mi Homes மற்றும் Mi Studio இடங்களில் வாங்கலாம்.
சலுகைகளை எப்படி பெறுவது?
ICICI வங்கியின் சலுகையை தவிர்த்து 8000 ஆயிரம் ரூபாய் வரை Redmi அல்லது மற்றும் Mi ஸ்மார்ட்போன்கள் அல்லாத போன்களுக்கு சலுகை கிடைக்கும். பழைய Xiaomi மற்றும் Redmi போன்களை மாற்றினால் 12 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கும். இந்த போனை வாங்கும் முதல் 1000 நபர்களுக்கு
Xiaomi 13 Pro Merchandise Box
கிடைக்கும்.
Xiaomi 13 Pro முக்கிய விவரங்கள்
இந்த போனில் பிரீமியம் அனுபவத்தை வழங்க 6.7 இன்ச் 2K டிஸ்பிலே வசதி, 120HZ refresh rate, Dolby Vision சப்போர்ட், Snapdragon 8 Gen 2 SoC, 4820mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5G, ட்ரிபிள் 50MP கேமரா, 32MP செல்பி கேமரா போன்ற அசத்தல் வசதிகள் பல உள்ளன.
இதன் கேமரா ஆப்பிள் ஐபோன் 14, கூகுள் பிக்சல் 7 சீரிஸ் மற்றும் சாம்சங் Galaxy S23 சீரிஸ் ஆகிய பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் கேமரா தரத்திற்கு நிகராக உள்ளது. இதில் சிறந்த தரத்துடன் Portrait படங்களை எடுக்கலாம்.
இதன் டிஸ்பிலே நம்மை எல்லாம் கவிழ்த்துவிடும் அளவிற்கு சிறப்பாக உள்ளது. சிறிய விவரங்கள் கூட சரியான நிறத்தில் நமக்கு காட்டுகிறது. இது ஆப்பிள் ஐபோன் 14 போனின் டிஸ்பிலே பிரைட்னஸ் அளவை விட அதிகப்படியாக இருக்கிறது. உங்களுக்கு பிரீமியம் டிஸ்பிலே வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த போன் உங்களுக்கு சரியான தேர்வாக அமையும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்