நாகர்கோவில்: ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் துடைத்துவிட முடியாது சமூகநீதி போராட்டம் தொடரும், என நாகர்கோவிலில் நடைபெற்ற தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றிவிழா அடுத்த ஆண்டு கொண்டாடப்படும் என்றார். தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு எனப்படும் திமுக ஆதரவு குழுவினர் சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
