புதுடில்லி : ”கொரோனா வைரஸ் பரவல் காலத்தின்போது, உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவை ஆயுதங்களாக மாறியதை நாம் மறக்க முடியாது. மருத்துவத் துறையிலும் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை படிப்படியாக குறைத்து வந்துள்ளோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக துறை நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகள் பெறுவதற்காக, மத்திய அரசு சார்பில் இணையக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில், சுகாதாரம், மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான இணையக் கருத்தரங்கம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பின், மிக நீண்ட காலமாக மருத்துவத் துறையில் ஒருங்கிணைந்த அல்லது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
இதை சுகாதார அமைச்சகத்துடைய பொறுப்பாக மட்டும் பார்க்காமல், ஒட்டு மொத்த அரசின் பொறுப்பாக நாங்கள் பார்த்தோம். இதையடுத்தே, சுகாதாரத் துறையில் பல பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கொரோனா காலத்தில், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை எப்படி ஆயுதமாக மாறின என்பதை நாம் அறிவோம்.
இந்த அரசு அமைந்ததில் இருந்து, மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை நாங்கள் படிப்படியாக குறைத்தோம். தற்சார்பே நம் நாட்டை மேம்படுத்தும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் மிகப் பெரும் முதலீடு வாய்ப்புகள் உள்ளன. இவற்றை முதலீட்டாளர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இது தான் நாங்க செய்தது
மருத்துவத் துறை மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து,தன் பேச்சில் மோடி குறிப்பிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் மருந்துகள் சந்தையின் அளவு, ௪ லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இது, ௧௦ லட்சம் கோடி ரூபாயாக வாய்ப்பு உள்ளது கொரோனா பரவல், உலகெங்கும் மருத்துவத்துறை மீதான கவனத்தை ஈர்த்தது. ஆனால், நாங்கள் மக்கள் நலன் குறித்து கவலைப்பட்டோம் மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை, மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்தோம் ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தால், ஏழை மக்களின், ௮௦ ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது நாடு முழுதும், ‘ஜன அவுஷதி’ எனப்படும் குறைந்த விலை மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், ஏழை, நடுத்தர மக்களின், ௨௦ ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது புதிதாக, ௨௬௦ மருத்துவக் கல்லுாரிகள் திறக்கப்பட்டன. ௨௦௧௪ல் இருந்ததைவிட, தற்போது மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இரட்டிப்பாகி உள்ளன இந்த பட்ஜெட்டில், புதிதாக ௧௫௭ செவிலியர் கல்லுாரி திறக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது,நம் நாட்டின் தேவையை மட்டுமல்லாமல், உலகின் தேவையை நிறைவேற்றும் டிஜிட்டல் மருத்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ‘இ – சஞ்சீவினி’ எனப்படும், ‘ஆன்லைன்’ வாயிலாக சிகிச்சை பெறும் திட்டத்தில், ௧௦ கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்