எதிர்கால யுத்தங்களை கணிக்க முடியாதென்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 40 ஆயிரம் டன் எடையுடன் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர் கப்பலான INS Vikrant -ல் கடற்படை கமாண்டர்களுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளிலும், கடலோர பகுதிகளிலும் தொடர்ந்து விழிப்புடனும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கடற்படை தயாராக இருக்க வேண்டும் என்றார்.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட துறை மூலம் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக ஆர்டர்கள் வரலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.