அமெரிக்காவின் பிரபலமான பிரீமியம் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரான ஜீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் ஆஃப்-ரோடு பைக்குகள், மின்சார அட்வென்ச்சர் பைக்குகள், மின்சார ஸ்டீரிட் பைக்குகள், சூப்பர்மோட்டோ மற்றும் டூயல் ஸ்போர்ட் பைக்குகளை தயாரிக்க உள்ளது.
Zero Motorcycles
ஜீரோ மோட்டார்சைக்கிள்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் தனது தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் ஆஃப்-ரோடு பைக்குகள், எலெக்ட்ரிக் அட்வென்ச்சர் பைக்குகள், எலெக்ட்ரிக் ஸ்ட்ரீட் பைக்குகள், சூப்பர்மோட்டோ மற்றும் டூயல்-ஸ்போர்ட் பைக்குகள் ஆகியவை விற்பனை செய்து வருகின்றது. போலாரிஸ் மற்றும் எக்ஸார் போன்ற பிற முதலீட்டாளர்களை உள்ளடக்கிய $107 மில்லியன் நிதியுதவியின் பகுதியாகவும், ஜீரோ மோட்டார் சைக்கிள்களில் $60 மில்லியன் டாலர்களை முதலீட்டை ஹீரோ மோட்டோகார்ப் முன்பே செய்துள்ளது. பவர் ட்ரெய்ன்களை தயாரிப்பதில் மிக சிறந்த நுட்பங்களை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்திக் கொள்ள ஹீரோ திட்டமிட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முன்ஜால் கூறுகையில், “ஜீரோ மோட்டார்சைக்கிள்களுடனான எங்கள் கூட்டணி, ஆட்டோமொபைல் துறையில் நிலையான தூய்மையான தொழில்நுட்பத்தின் சகாப்தத்தை நோக்கிய நமது பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். ஜீரோ நிறுவனத்தை எங்கள் கூட்டாளியாக கொண்டு, இந்தியாவிலும் உலகளாவிய சந்தைகளிலும் மின்சார இரு சக்கர வாகனங்களின் மாற்றத்தை விரைவுபடுத்த நாங்கள் திட்டங்களை செயல்படுத்துவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா பிராண்டில் முதல் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பான வசதிகளுடன் 165 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் விற்பனைக்கு ஜெய்ப்பூர், டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.