கோவை: கோவையில் சாத்தியபாண்டி கொலை வழக்கில் சரணான குற்றவாளியை விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பமுயன்ற சஞ்சய் ராஜாவை உதவி ஆய்வாளர் சந்திர சேகர் காலில் துப்பாக்கியால் சுட்டார். காலில் காயமடைந்த சஞ்சய் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.