சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் எண்டெர்ப்ரேனுர்ஷிப் கல்லூரி ஆண்டுதோறும் அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான பேராசிரியர் ஜே. பிலிப்பின் மகள் செல்வி மரியா பிலிப்பின் நினைவாக மாநிலம் தழுவிய விவாத போட்டி கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
செல்வி மரியா பிலிப் அவர்கள் மிகச்சிறந்த விவாதிப்பவராகவும் மகளிர் நலன் கருதுபவராகவும் விளங்கியவர். மேலும் இந்நிறுவனத்தை நிறுவியதிற்க்கு உத்வேகம் அளித்தவராகவும் திகழ்ந்தார். இந்த விவாத போட்டி கல்லூரி மாணவ மாணவியர்களின் பேச்சுத்திறனை செம்மைப்படுத்தவும் தன்னம்பிக்கைக் கொண்ட நபர்களாகவும் மாற உறுதுணை செய்கிறது.
அவ்வகையில் இவ்வாண்டும் சென்னை, கோவை, மதுரை திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இருந்து 89 கல்லூரி சேர்ந்த 174 அணிகள் அரை இறுதி போட்டியில் பங்கேற்றனர். இந்நிகழ்வு பிப்ரவரி 25 ஆம் தேதி 2023 அன்று சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இன்டெர்ப்ரேனுர்ஷிப் சென்னை ஒரகடம் வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ரவி வீரராகவன் முதல்வர் பேராசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் திரு. ஏ விஸ்வநாதன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி சேர்ந்த மாணவர் ஜென்சென் ஜான்சன் மனைவி பிரஞ்செனி ரஞ்சன் ஆகியோர் முதல் இடம் பெற்றனர் அடுத்தபடியாக திருச்சி பிஷப் ஈபர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் வர்ஷினி தனுஸ்ரீ ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர் வெற்றி பெற்ற இரு அணிகளும் அடுத்து நடக்கவிருக்கும் மாபெரும் இறுதிப்போட்டிக்கு தேர்ச்சி அடைந்தனர்.