எலஹங்கா: டாக்டரை எரித்து கொன்ற மூன்று பேரை, ஒரு மாதத்துக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு எலஹங்கா அருகே உள்ள சோழதேவனஹள்ளி அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடந்த மாதம் 7ம் தேதி, ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். உடல் கருகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காண முடியவில்லை.
எனவே முதற்கட்டமாக, சந்தேக மரணம் என எலஹங்கா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விசாரணையில் கொலை செய்யப்பட்டது, டாக்டர் ஸ்ரீதர், 45 என்பது தெரியவந்தது.
இவர் எலஹங்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் டாக்டராக பணி புரிந்து வந்தார். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு, கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், பாரில் ஸ்ரீதருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த கோவர்த்தன், 35, பாஸ்கர், 30, பூடப்பா, 33 ஆகிய மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும்; இந்த முன்விரோதம் காரணமாக மூவரும், ஸ்ரீதரை கொலை செய்ததும் தெரியவந்தது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பின் துப்பு துலங்கிய இந்த வழக்கில், கொலையாளிகள் மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement