தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 1,748 அரசு மற்றும் தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என்று ஏராளமானோர் தங்கி உள்ளனர்.
இந்த விடுதிகளில் 1,155 விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள 714 பெண்கள் தங்கு விடுதிகளில் 31 தங்கும் விடுதிகள் மட்டுமே முறையாக அனுமதி பெற்று இயங்கிவருவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 873 பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு சமூக நலத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 379 பெண்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தங்கும் விடுதிகள் உரிய உரிமம் இன்றி செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சனை பெண்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் இதில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக வந்துள்ளது.