சென்னை; வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக உள்ளது என பீகார் மாநில அதிகாரிகள்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக பீகார் குழுவினர் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்த நிலையில், இன்று காலை தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்து பேசினர். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு […]