அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே பயணி ஒருவர் ஆண்கள் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
திடீரென்று வன்முறை
குறித்த விமானமானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து போஸ்டன் நோக்கி பயணித்துள்ளது.
இந்த விவகாரத்தில் 33 வயதான Francisco Severo Torres என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், பல பிரிவுகளில் வழக்கும் பதிந்துள்ளனர்.
@simik
அந்த விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்த போது Torres திடீரென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் உடைந்த ஸ்பூன் ஒன்றுடன் விமானத்தின் முன்பகுதி நோக்கி விரைந்துள்ளார்.
அங்கே ஊழியர் ஒருவரின் கழுத்தில் அந்த ஸ்பூனை பயன்படுத்தி மூன்று முறை தாக்கியுள்ளார்.
மட்டுமின்றி, முதல் வகுப்பு பகுதியை ஒட்டிய அவசரகால கதவை திறக்க என்ன செய்ய வேண்டும் எனவும் சக பயணி ஒருவரிடம் விசாரித்துள்ளார்.
இந்த நிலையில், சக பயணிகளால் அவர் மடக்கப்பட்டார். விமானம் தரையிறங்கியதும் போஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.
கதவை திறக்க முயன்ற நபர்
விசாரணை அதிகாரிகளிடம் அவர் தெரிவிக்கையில், ஸ்பூன் ஒன்றை உடைத்து அதை ஆயுதமாக பயன்படுத்தியதாகவும், அவச கால கதவை திறக்க முயன்றதாகவும், அப்படி அந்த கதவு திறந்தால் பல இறக்க நேரிடும் என தமக்கு தெரியும் எனவும் அதிகாரிகளிடம் Torres குறிப்பிட்டுள்ளார்.
@dailymail
விமான ஊழியரை நடுவானில் ஆயுதம் கொண்டு தாக்கியதற்காக அந்த நபருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க கூடும் எனவும் 5 ஆண்டுகள் கண்காணிப்பில் விடுவிக்கவும் வாய்ப்புள்ளது.
மட்டுமின்றி 2.5 லட்சம் டொலர் அபராதமும் விதிக்க உள்ளூர் சட்டத்தில் இடமிருப்பதாக கூறப்படுகிறது.