மயிலாடுதுறை மாவட்டத்தில் பார்வையற்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கழுகாணிமுட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ரமேஷ்(35). இவர் மயிலாடுதுறை அருகே தெரிந்தவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த வீட்டில் தனியாக இருந்த பார்வையற்ற, மூளை வளர்ச்சி குன்றிய 16 வயதுடைய சிறுமிக்கு ரமேஷ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமி கூச்சலிடவே குடும்பத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அங்கிருந்து ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.