பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனன.
ஆங்கில கால்வாய் ஊடாக சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருவதை தடுக்கும் புதிய சட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் குடியேறும் மக்களை பாதுகாப்பான ஏனைய நாடுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாத வகையில் நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.