டெல்லி: சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மா மீண்டும் பொறுப்பேற்றார். அதுபோல, நாகாலாந்து மாநில முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டது. மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே பிப்ரவரி 27ந்தேதி […]
