ரேஷன் கடை ஊழியர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது!?

ரேஷன் கடை ஊழியர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் தேர்வர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர் பதவிகளுக்கு மாநிலம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வெறும் நேர்காணல் மட்டும் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனவே லட்சக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான, நேர்காணல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 15 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. முதலில் விண்ணப்பதாரரின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

பின்னர், அன்று மாலையே நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும், கிட்டத்தட்ட 15 -20 நேர்காணல் அறைகள் அமைக்கப்பட்டு, முன்னாள்/இன்னாள் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தேர்வை நடத்தினர்.

பொங்கலுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு முடிவுகளை அந்தந்த மாவட்ட வட்டாட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், நியாய விலைக் கடை தேர்வு முடிவில் எந்த முன்னேற்றமும் இல்லை. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் இதுநாள் வரை இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.