Vijay, SA Chandrasekhar:விஜய் பற்றி அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பொய் சொன்னாரா?​

SA Chandrasekhar, Vijay issue: தளபதி விஜய் பற்றி அவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பொய் சொன்னாரா என்கிறார்கள் ரசிகர்கள்.

​விஜய்​தளபதி விஜய்க்கும் அவரின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. அப்பா, மகன் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற இடத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் விஜய் பற்றி செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அளித்த பதில் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.
​அப்பா​எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதாவது, விஜய்க்கும், எனக்கும் இடையே பிரச்சனை இருந்தது உண்மை தான். தற்போது எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்றார். அதை கேட்ட தளபதி ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள். இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகரின் லேட்டஸ்ட் பேட்டி அவர்களை கவலை அடைய செய்திருக்கிறது.
​கேளுங்க​திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருக்கும் புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவாரா என கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, விஜய் பற்றிய கேள்விகளை அவரிடமே கேட்டுக்கோங்க என கூறிவிட்டு இடத்தை காலி செய்தார். இதை பார்த்தவர்களோ, அப்பா, மகன் இடையேயான பிரச்சனை தீரவில்லை போன்று என பேசுகிறார்கள்.

​பொய்​குடும்பத்தை மையமாக வந்த வாரிசு படத்திற்காக தனக்கும், மகனுக்கும் இடையேயான பிரச்சனை தீர்ந்துவிட்டதாக கூறினாரா எஸ்.ஏ. சந்திரசேகர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று பொய் சொன்னாரா என்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து திருவண்ணாமலை வருவதற்குள் என்னாச்சு அப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
​அரசியல்​விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்களை விட எஸ்.ஏ. சந்திரசேகர் தான் அதிகம் ஆசைப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளுக்கு வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே ஆகிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அடித்து ஒட்டுகிறார்கள் ரசிகர்கள். அவர்கள் அப்படி செய்வதில் தவறு எதுவும் இல்லை என தொடர்ந்து கூறி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

​கட்சி​முன்னதாக விஜய்யின் பெயரில் கட்சியை பதிவு செய்ய முயன்றார் எஸ்.ஏ. சந்திரசேகர். அது குறித்து அறிந்த விஜய்யோ, அந்த கட்சிக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார். அப்பா செய்த காரியத்தால் அவர் மீது கோபம் கொண்டார். அதில் இருந்தே அப்பா, மகன் இடையே புகைச்சலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
​மகிழ்ச்சி​வாரிசு படத்தை விஜய்யுடன் சேர்ந்து பார்த்ததாக எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார். அதனால் இனி விஜய்க்காக எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கதை கேட்க வாய்ப்பு இருக்கிறது என்கிற அளவுக்கு ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.