ஈரான் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்ப உள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா – மத்திய ஆசிய கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐ.நா பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஐ.நா உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஆப்கானிஸ்தானுக்கு புதிய தவணையாக 20,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.