இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.
2023 மார்ச்08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 மார்ச் 08ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் திருகோணமலை,ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர்வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.