ஊட்டியில் ஆளுநர் 5 நாள் முகாம்

ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.  ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி ஊட்டிக்கு வந்தார். தொடர்ந்து முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று மதியம் ஊட்டிக்கு வந்தார்.  அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு சென்றார். வரும் 12ம் தேதி வரை ஊட்டியில் தங்குகிறார். 10ம் தேதி நீலகிரி மாவட்டத்தின் அருகில் அமைந்துள்ள கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கலந்து கொள்ளும் பிற நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.