ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே!!

ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரே மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தால் அதனை ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும்.

நுகர்வோர் இணைப்பதற்கு முன்வராவிட்டால் அதனை கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும். மேலும் மின் வாரியம் மின் இணைப்பு கொடுக்க அந்தப் பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

சிலர் ஒரே வீட்டில் தனித் தனிக் குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் இதுபோன்ற குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெற்றிருந்தால் அங்கு தனி ரேஷன் அட்டை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இதன் நோக்கம் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே. இதுகுறித்து தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.