டெல்லியில் சிகரெட் தர மறுத்த பன்னாட்டு நிறுவன ஊழியர் மீது இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்தியது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வார்கா பகுதியைச் சேர்ந்த சௌரவ் வர்டாக் என்பவர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் அண்மையில் தனது அலுவலகம் அருகே நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நண்பர்களுடன் வந்த பவன் என்பவர் தனக்கு ஒரு சிகரெட் தருமாறு சௌரவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சிககெட் தரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பவனை, சௌரவ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பவன் பின்தொடர்ந்து அலுவலக வளாகத்திற்குள் புகுந்து சௌரவை சரமாரியாகத் தாக்கினார். தடுக்க வந்த அலுவலக பாதுகாவலர்களையும் அடித்துள்ளார்.
தாக்குதலில் சௌரவ் வர்டாக்கின் மூக்கு உடைந்தது. இந்த சம்பவம் குறித்து சௌரவ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவன் இப்படி அடிக்கடி யாரிடமாவது வேண்டும் என்றே மோதலில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
newstm.in