புதுடெல்லி: இஸ்ரோ, பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையம் இணைந்து கடந்த 2011ல் மேகா டிரோபிகியூஸ் -1 (எம்டி-1) செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பின. 3 ஆண்டு ஆயுட்காலத்துடன் வானிலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள் 10 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டது.
2021ல் செயலிழந்த 1000 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளை, விண்வெளியிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில், பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்ப கொண்டு வந்து அழிக்கும் கடின பணியை இஸ்ரோ நேற்று மேற்கொண்டது. திட்டமிட்டபடி நேற்று மாலை பசிபிக் பெருங்கடலில் செயற்கைகோள் அழிக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.