அலிகார், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், உத்தர பிரதேசத்தின் அலிகாரில் உள்ள மசூதியின் மேல், தார்ப்பாய் போர்த்தி மூடப்பட்டுள்ளது.
இது குறித்து, மசூதியின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹாஜி முகமது இக்பால் கூறுகையில், “நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மசூதியில் யாரும் வண்ணப் பொடிகளை துாவிடாதவாறு, மசூதியை தார்ப்பாய் வைத்து மூடுகிறோம்.
எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழக்கூடாது என்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement