பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும். முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்திவந்துள்ளார்கள். ராம – ராவண யுத்தத்தில் ராவணன் தோல்வி அடையப்போகும் […]