புதிய இந்தியா நோக்கி பெண்கள்; இன்று உலக மகளிர் தினம்…| Women Towards a New India; Today is International Womens Day…

தாய் , சகோதரி, மனைவி , மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள் , ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான்

நாம் வசிக்கும் நாடு கூட ‘தாய் நாடு’ என்று தான் அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள், மலைகள் என, முக்கியமான அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது. அந்தளவிற்கு, நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சிறந்து விளங்குகின்றனர்.

நாட்டின் முதுகெலும்பான, பெண்களை கவுரவிக்கும் வகையில், பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பெண்களுக்கு, உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட, உலக மகளிர் தினம், ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து, பெண்கள் உரிமையை வென்றெடுத்த நாள் என, கருதப்படுகிறது. அந்த உரிமை யை வலியுறுத்துவதற்காகவே, ஆண்டுதோறும் மார்ச், 8ல் உலக மகளிர் தினமும் கொண்டாடப்படுகிறது.

.இன்று மகளிர் தினம், உலகில் குடும்ப பந்தம், பாசம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, ஈகை உள்ளிட்ட, சகலத்திற்கும்ஆதாரமாக விளங்கும் பெண்களை, மதிப்போம், போற்றுவோம், வணங்குவோம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.