மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை: மதுரை காவல் ஆணையர் உத்தரவு

மதுரை: ஆண்டுதோறும் மார்ச் 8- தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடுவதுண்டு. பணியிடங்களில் பாலின பேதமும், பாலியல் சீண்டலும் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பணியிடத்தில் பாலின சமத்துவமின்மை கூடுதல் வீட்டுப் பொறுப்புகள் போன்றவை பெண்களை கடும் நெருக்கடிக்கு தள்ளியது. அனைத்து இடங்களிலுமே ஆண்களுக்கான வாய்ப்பு பெண்களை ஒப்பிடும்போது சற்று அதிகமாகவே உள்ளது.

அவர்கள் செய்யும் பணிக்கு போதிய அங்கீகாரம் என்பது கிடைப்பதில்லை. அதனால் பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்து மாற்றத்தை விதைக்க வேண்டும். இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குதல் வணிகம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியலில் பெண்களை சமமாக மதித்தல் போன்ற கொள்கைகளை பணியிடங்களில் அமல்படுத்துவது நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் பணி புரியக்கூடிய பெண் பெண் காவலர்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் அனுமதியுடன் கூடிய விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.