தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .
மகளிர் தின வாழ்த்து செய்தியில் , பாவேந்தர் பாரதிதாசனின், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் நாட்டின் கண்கள் ” என்ற வரிகளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் முதலமைச்சராக நான் முதல் கையொப்பமே மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்துக்குத் தான் . .மகளிரின் பேறு கால விடுப்பு,9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயரத்தி ஊதியத்துடன் வழங்கப்பட ஆவண செய்தேன்.
அரசு பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதத்திற்கு உயர்த்தியும் அனைத்து அலுவலங்களில் பெண்கள் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு பணி புரிய சந்தர்ப்பங்கள் வழங்கியுள்ளோம்.
பெண்கள் உயர் கல்வி உறுதி செய்யும் வகையில் மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையாரின் பெயரில் ” புதுமைப்பெண் ” திட்டத்தையும் , தொடங்கி கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ருபாய் வழங்கியும் வருகிறது அரசு .
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகள் , குடும்பத்த தலைவிகள் பெயரிலேயே வழங்கப்பட ஆவண செய்துள்ளோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் , வங்கிகளில் பெற்ற கடன் தொகை, நகைக்க கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டோம் . 50 சதவீத வேலை வாய்ப்பு , சிப்காட் தொழிற் பேட்டையில் வேலை வாய்ப்பு,சென்னை ,மதுரை கோவை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் பெண் மேயர்களை நியமித்துள்ளோம் அரசியல் தொடங்கி ஆளுமை வரை பெண்கள் முன்னேற பாடு பட்ட ஒரே ஒரு ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி
வருகிற நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்
பெண்ணுரிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு..
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே . என்பதை செயலில் காட்டி பெண்ணுரிமைப் பேணுவோம் .. என்று கூறினார் .