மகளிர் தின ஸ்பெஷல்.. பெண் காவலர்களுக்கு விடுமுறை.. காவல் ஆணையர் உத்தரவு.!

இன்று (மார்ச் 8ம் தேதி) ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

இதனையடுத்து இன்றைய தினம் பெண்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அது மட்டும் இல்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களை கொண்டாடும் வகையில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பெண்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி இன்று ஒரு நாள் அனுமதியுடன் கூடிய விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.