மக்களவை தேர்தல் 2024: பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

2014 மற்றும் 2019 என தொடர்ந்து இரண்டு மக்களவை தேர்தல்களில் வென்று நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது. இதில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் முறையே பாஜக 282, 303 என வெற்றி வாகை சூடியது. அதுவே தேசிய ஜனநாயக கூட்டணி என்று எடுத்து கொண்டால் முறையே 336, 353 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.

மக்களவை தேர்தல்

2014 மக்களவை தேர்தலில்
காங்கிரஸ்
எதிர்ப்பு மனநிலை, மோடி அலை ஆகியவற்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் 2019 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை பாஜகவிற்கு பெரிதும் சாதகமாக மாறியது. இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. இதில் பலம் வாய்ந்த பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

பிரதமர் வேட்பாளர்

எப்படி வியூகம் அமைக்க வேண்டும்? போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கூட்டணி அமைவதே பெரிய சிக்கலாகி விடும். எனவே முதலில் வலுவான கூட்டணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

பாஜகவை வீழ்த்துவது எப்படி?

அப்படி செய்தால் பாஜக கூட்டணி வீழ்த்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதில் எந்தெந்த மாநிலங்கள், எந்தெந்த பிராந்திய கட்சிகள் ஒன்று சேர்ந்தால் சரியாக இருக்கும் என்ற கணக்கு மிக மிக முக்கியம். முதலில் எதிர்க்கட்சிகள் அல்லது பிராந்திய கட்சிகள் ஆளும் மாநிலங்களை எடுத்துக் கொள்வோம்.

சரியான கூட்டணி

இந்த 15 மாநிலங்களில் மொத்தம் 285 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன. எஞ்சிய மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 272 இடங்களில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்கும். அப்படி பார்த்தால் மேற்குறிப்பிட்ட கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது.

முரண்படும் கட்சிகள்

ஆனால் ஒருமித்த கூட்டணி அமையுமா? என்பது கேள்விக்குறியே ஆகும். ஏனெனில் ராகுல் காந்தி, நிதிஷ் குமார், சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார் உள்ளிட்டோர் தேசிய அரசியலில் தனி முத்திரை பதிக்க விரும்புகின்றனர். எனவே பிரதமர் வேட்பாளருக்கு ரேஸில் களமிறங்க வாய்ப்புள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியை பொறுத்தே வெற்றி வாய்ப்புகள் இருக்கும் எனக் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.