பெங்களூரு: கர்நாடக பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக் ஷப்பா மைசூர் சாண்டல்சோப் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அந்த நிறுவனத்துக்கு வேதிப்பொருட்கள் விநியோகம் செய்ய ஒப்பந்ததாரரிடம் விருபாக் ஷப்பாவின் மகன் பிரஷாந்த் முதல்கட்டமாக ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் சிக்கினார். அவரது வீட்டில் ரூ.7.72 கோடி ரொக்கப்பணம் சிக்கியது.
இந்த வழக்கில் மாதல் விருபாக் ஷப்பா ஜாமீன் வழங்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதைநேற்று விசாரித்த நீதிபதி நடராஜன், மாதல் விருபாக் ஷப்பாவுக்கு ரூ.5 லட்சம் பிணைத்தொகையுடன் கூடிய நிபந்தனையின் பேரில் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.