ரட்லம்,மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஹனுமன் புகைப்படத்தின் முன் ஒழுக்கக்கேடாக நடந்து, பா.ஜ.,வினர் கடவுளுக்கு அவமரியாதை செய்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் குற்றஞ்சாட்டினார்.
புகைப்படம்
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ரட்லம் மாவட்டத்தில் கடந்த 4 – 5ம் தேதிகளில், 13வது, ‘மிஸ்டர் ஜூனியர் பாடி பில்டிங்’ போட்டி நடந்தது.போட்டிக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மேயர் பிரகலாத் படேல் மற்றும் எம்.எல்.ஏ., சைதன்யா காஷ்யப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
போட்டி நடந்த அரங்கில் பிரமாண்ட ஹனுமன் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், ‘பாடி பில்டிங்’ செய்யும் பெண்கள் சிலர் மேடை ஏறி, தங்கள் உடற்கட்டை காட்டி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். ஹனுமன் புகைப்படம் முன் இது போன்ற ஒழுக்கக்கேடான செயலை செய்து பா.ஜ.,வினர் அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
வருத்தம்
நிகழ்ச்சி நடந்த இடத்தை சுத்தப்படுத்துவதாக கூறி நேற்று முன்தினம் அங்கு கங்கை நீரை தெளித்தனர். இது குறித்து, மத்திய பிரதேச காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் கூறியதாவது:பா.ஜ., நடத்திய நிகழ்ச்சியில் ஹனுமன் அவமதிக்கப்பட்டுள்ளார்.
அதைப் பார்த்து மனம் வருந்தினேன். இந்த செயல், ஹிந்து தர்மத்துக்கு எதிரானது.
உங்கள் ஊர்களில், தீய சக்திகளின் உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்து, ஹோலி பண்டிகையை கொண்டாடுங்கள். அந்த நேரத்தில் ஹனுமன் சாலிசாவை அனைவரும் படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement