வரும் மார்ச் 10 ஆம் தேதி சீன சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் குறைந்த சிசி X350 மற்றும் X500 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் தற்பொழுது விற்பனை செய்யப்பட உள்ள X350, X500 பைக்குகள் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் மிக குறைவு, ஆனால் இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
Harley-Davidson X350, X500:
சீனாவின் Qianjiang மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஹார்லி-டேவிட்சனின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த மாடலின் என்ஜின் QJMotor உடையதாகும். X350 பைக்கில் 30-35hp பவரை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்தப்படியாக ஹார்லி-டேவிட்சன் X500 பைக்கில் 50hp பவர் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு பைக்குகளும் எல்இடி விளக்குகள், ஒரு USD ஃபோர்க்/ஆஃப்செட் மோனோஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயர்களிலும் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக் பெற்றிருக்கும். சிறிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் சேர்க்கப்பட்டுள்ளது.