₹ 16.75 லட்சத்தில் ஹூண்டாய் Alcazar 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

பிரீமியம் எஸ்யூவி சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி காரில் கூடுதலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்ற மாடல் ₹ 16.75 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2.0 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளது.

கடந்த சில வாரங்களாக முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தற்போது விலை அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களில் விநியோகம் துவங்க்கப்படலாம். இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற எம்ஜி ஹெக்டர், எக்ஸ்யூவி 700, மற்றும் இன்னோவா ஹைக்ராஸ் ஆகிய கார்களை எதிர்கொள்ள உள்ளது.

ஹூண்டாய் Alcazar

புதிய Alcazar 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் RDE மற்றும் E20 (எத்தனால்) எரிபொருள் பயன்படுத்தும் வகையில் வந்துள்ள என்ஜின் 5,500 rpm இல் 158 hp பவர், 1,500-3,500 rpm இல் 253 Nm டார்க் வழங்கி கியர்பாக்ஸ் தேர்வுகளில் ஆறு வேக மேனுவல் புதிய 7-வேக DCT ஆகியவை என இரண்டு விதமாக கிடைக்கும். மைலேஜ் பவர்டிரெய்ன் முறையே லிட்டருக்கு 17.5 கிமீ மற்றும் 18 கிமீ வழங்கும் என ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது

115 ஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. இதில் ஆறு-வேக மேனுவல் மற்றும் ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி என இரு கியர்பாக்ஸ் வசதியை பெறுகின்றது.

அனைத்து வேரியண்டுகளிலும் இப்பொழுது 6 ஏர்பேக்குகள் பெற்று ESC, TPMS, 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் வியூ மானிட்டர் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கு போன்றவற்றுடன் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் என பல வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.

Hyundai Alcazar Prestige 6MT 7-seater – ₹ 16.75 lakh 

Hyundai Alcazar Platinum 6MT 7-seater – ₹ 18.65 lakh

Hyundai Alcazar Platinum (O) DCT 7-seater  – ₹ 19.96 lakh

Hyundai Alcazar Signature (O)DCT 7-seater  – ₹ 20.25 lakh

Hyundai Alcazar Platinum (O) DCT 6-seater – ₹ 19.96 lakh

Hyundai Alcazar Signature (O) DCT 6-seater – ₹ 20.25 lakh

(ex-showroom, Delhi)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.