புதுடெல்லி: இந்தியாவில் 6%-க்கும் அதிகமான அல்லது 4,40,989 நிறுவனங்கள் அடிப்படை பசுமை விதிகளைக்கூட கடைபிடிப்பதில்லை. பசுமை விதிகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதங்களை விதிக்கிறது.
சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் பஞ்சாப் மாநிலம் (6,293)முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து குஜராத் (4,605), ராஜஸ்தான் (3,796), மகாராஷ்டிரா (3,043), ஜார்க்கண்ட் (1,760 நிறுவனங்கள்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ரசாயனம், சிமெண்ட் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வரும் 34 நிறுவனங்களுக்கு ரூ.13.4 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.