தமிழ் சினிமாவில் சில காம்போக்கள் இணைந்தாலே அது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும். அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. செல்வராகவன் – யுவன், வெங்கட் பிரபு – யுவன், ரஜினி -ரஹ்மான் என பல காம்போக்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக இருக்கின்றன. அதில் ஒன்று தான் தனுஷ் மற்றும் அனிருத் காம்போ.
3 படத்தின் மூலம் அனிருத்தை ஒரு இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் தனுஷ். அதன் பின் எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி என இவர்களது வெற்றி கூட்டணி தொடர்ந்தது. மேலும் அனிருத் மளமளவென ஹிட் கொடுத்து இன்று முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.
AK62: மகிழ் திருமேனிக்கு அஜித் கொடுத்த CD ..அப்சட்டான மகிழ்..!
ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர். அந்த அளவிற்கு பிசியாக இருக்கும் அனிருத் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் இணைந்தார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
தங்கமகன் படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் திருச்சிற்றபலம் படத்தின் மூலம் இணைந்தது. இடையில் சில பல கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்களது கூட்டணி இணையாமல் இருந்தது. இதனால் ரசிகர்களும் இவர்களின் கூட்டணியை மிஸ் செய்தனர்.
என்னதான் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன், வடசென்னை, கர்ணன் போன்ற படங்களின் இசை செமையாக இருந்தாலும் அனிருத் மற்றும் தனுஷின் கூட்டணியை ரசிகர்கள் மிஸ் செய்தனர். அந்த ஏக்கத்தை திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் அனிருத் மற்றும் தனுஷ் போக்கினார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு இணைந்த இவர்களின் கூட்டணி படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து தனுஷின் படங்களுக்கு அனிருத் தொடர்ந்து இசையமைப்பார் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு வருத்தமான செய்தி வந்துள்ளது. அதாவது தனுஷ் இயக்கவிருக்கும் ஐம்பதாவது படத்திற்கு அனிருத் இசைமைக்கவில்லையாம்.
பல மொழிகளில் பல படங்களில் பிசியாக அனிருத் இருப்பதால் தனுஷின் படத்திற்கு இசையமைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே தனுஷ் இயக்குனராக அறிமுகமான பா.பாண்டி படத்திற்கு அனிருத் இசையமைக்காதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
தற்போது தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்திற்காவது அனிருத் இசையமைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் தற்போது நடக்காது என்று தெரிந்தவுடன் ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இருப்பினும் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.