ஜகார்தா, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தா, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உடைய நகரமாக உள்ளது. இதனால், அந்நகரம் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
மேலும், அங்குள்ள ஜாவா கடல், ஜகார்தா நகரை மெல்ல மூழ்கடித்து வருகிறது.
வரும், 2050ல், ஜகார்தாவின் மூன்றில் ஒரு பங்கு கடலுக்குள் மூழ்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தலைநகர் ஜகார்தாவை, நாட்டின் வடகிழக்கு பகுதியில் 2,000 கி.மீ., தொலைவில் உள்ள போர்னியோ தீவுக்கு இடம் மாற்ற முடிவு செய்து, அந்த பணியை இந்தோனேஷிய அரசு துவக்கி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement