பிலிப்பைன்ஸில் கடந்த ஜனவரி 24-ஆம் திகதி காணாமல் போன விமானம், விபத்துக்கில்லாகி பல பாகங்களாக இன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸின் இசபெலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஜனவரி 24-ஆம் திகதி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போன செஸ்னா (Cessna) விமானத்தின் சிதைந்த பாகங்களையும், அதில் இருந்தவர்களின் 6 உடல்களையும் தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் இன்று (வியழகிழமை) கண்டுபிடித்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இசபெலா மாகாண இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை அலுவலகத் தலைவர் கான்ஸ்டன்ட் ஃபோரோண்டா (Constante Foronda), கடலோர நகராட்சிக்கு அருகிலுள்ள தொலைதூர, காடுகள் நிறைந்த மலைச் சரிவில் மீட்புக் குழுவினர் விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.
Bombo Radyo
விமான பாகங்கள் அதன் நிறம் மற்றும் வால் எண் மூலம் அடையாளம் காணப்பட்டது என்று அவர் கூறினார்.
மீட்பு பணியாளர்கள் உடல்களை மீட்டு வருவதாகவும், நிலப்பரப்பு மற்றும் வானிலை காரணமாக அவற்றை கீழே கொண்டு வர மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.
விமானம் பிளவுபட்டதாகவும், அதன் துண்டுகள் மலைச் சரிவில் சிதறியதாகவும் அவர் கூறினார்.
செஸ்னா எனும் இந்த சிறிய விமானம் இசபெலா மாகாணத்தில் உள்ள கடலோர நகரத்திற்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் அதன் இலக்கை அடைய முடியவில்லை.