வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீய்ஜிங்: ஆறு ஆண்டுகளுக்கு முன் தூதரக உறவை முறித்துக் கொண்ட ஈரான், சவுதி அரேபியா நாடுகள் சீன தலையிட்டால், மீண்டும் உறவை புதுப்பித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், ஷியா பிரிவு மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு, பல்வேறு நாடுகளில் வாழும், ஷியா பிரிவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷியா பிரிவினர் அதிகம் வாழும், ஈரான் நாடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஈரான் உடனான துாதரக உறவை முறித்துக் கொள்வதாகவும் சவுதி அரேபியா அறிவித்தது.
இந்நிலையில், இரு நாடுகளிடையே தூதரக ரீதியில் மீண்டும் நட்புறவு ஏற்பட கடந்த 2012-ம் ஆண்டு முதல் பல சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதையடுத்து இருநாடுகளிடையே மீண்டும் நட்புறவு ஏற்படுத்திட விரைவில் தூதரகங்களை திறந்து, தூதரக அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நட்புறவு முயற்சிக்கு சீனா இடைத்தரகாக செயல்பட்டதாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவு வளர்ச்சி ஏற்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement