உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றி பெற்றால், அதன் தொடர்ச்சியாக தைவான் மீது சீனா போர் தொடுக்கும் என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் புடினின் வெற்றி சீனாவை உற்சாகப்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டார்.
மேலும் உக்ரேனிய நகரமான பாக்முட் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ஜென்ஸ், புடினின் படையெடுப்பு வெற்றியடையும் பட்சத்தில், ஐரோப்பாவில் இன்று நடப்பது நாளை ஆசியாவிலும் நிகழலாம் என்று தெரிவித்தார்.