கால்வாய்க்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தால் பலமிழந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

திருப்பூரில் கழிவுநீர் கால்வாய் திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக பலமிழந்து காணப்பட்ட வீட்டின் சுற்றுச்சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில், 10ஆம் வகுப்பு மாணவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அருள்ஜோதிபுரம் பகுதியில் வீடுகளின் சுற்றுச்சுவர்களை ஒட்டி இந்தப் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால், பல இடங்களில் சுவர்கள் பலமிழந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த அபிராம் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், சாலைக்கும் வீட்டுக்கும் நடுவே உள்ள பள்ளத்தைக் கடக்க மரப்பலகையை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் தலைமீதே விழுந்தது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.