தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மார்ச் 10) நண்பகல் 12.00 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் அறையில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் உடனிருந்தனர்.