சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் ஜூன் 8 வரை நீர் திறக்க உத்தரவு

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் ஜூன் 8 வரை நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2023-ஆம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்கள் 45000 ஏக்கருக்கு  நாள் ஒன்றுக்கு முறையே  350 கன அடி / வினாடி மற்றும் 220 கன அடி / வினாடி, மொத்தம் 570 கன அடி / வினாடி வீதம் 11.03.2023 முதல் 08.06.2023 வரை 90 நாட்களுக்கு தொடர்ச்சியாக 4432.32 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடவும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு 5000 ஏக்கர் நிலங்களுக்கு உரிமை நீர் 1200 மில்லியன் கன அடி  நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30-க்குள் விவசாயிகளின் கோரிக்கைப்படி தேவைப்படும்பொழுது மூன்று தவணைகளில் தண்ணீர்  திறந்துவிடவும் அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள  50000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.