திருமணம் செய்து கொள்ளலாமா? ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர், சக பெண் எம்.பி-யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரஸியம் அரங்கேறியுள்ளது.

விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. நாதன் லேம்பர்ட் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, தனது காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினர் நோவா ஏர்லிச் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார்.

தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும் இரவில் அதனை தருவதாகவும் அவர் தெரிவித்தார். இதை பார்த்து அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். நாதன் லேம்பர்ட் காதலை நோவா ஏர்லிச் ஏற்றுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.