திருமாவுக்கு அதிமுக அழைப்பு… மாறுகிறதா கூட்டணி கணக்கு?!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக கிடைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக அவருக்கு திருமா வாழ்த்து சொன்னது, ‘தமிழக காவல்துறை, ஸ்டாலினின் காவல்துறையாக இருக்க வேண்டும். அமித் ஷாவின் காவல்துறையாக இருக்கக் கூடாது’ என்ற ரீதியிலான விமர்சனங்களும் இதற்கு வலு சேர்த்தன.
இந்த நிலையில், “திருமாவளவன் மீது ஜெயலலிதா அன்பும், பாசமும் கொண்டவர். திருமாவளவன் எங்கள் சகோதரர். அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது அடுத்த பரபரப்பை பற்றவைத்துள்ளது.
இதனால், ‘தி.மு.க-வின் கூட்டணி மாறுகிறதா… பா.ம.க உள்ளே வருகிறதா? வி.சி.க வெளியேறி அ.தி.மு.க-வுக்குப் போகிறதா?’ போன்ற கேள்விகள்தான் தமிழ்நாடு அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்காக பரபரக்கிறது.
உண்மையில் கூட்டணிக் கணக்குகள் மாறப்போகிறதா?
இது குறித்த விறுவிறுப்பான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
எடப்பாடிக்கு வாழ்த்து… அதிமுக-வுடன் கூட்டணியா..?
ஜூ.வி-க்கு திருமா அளித்த பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
பாஜக-வை அதிமுக சம்பவம் செய்யும் பின்னணி என்ன?!
அ.தி.மு.க., பா.ஜ.க நிர்வாகிகளிடையே சமூக வலைதளங்களில் மோதல் வலுத்திருக்கிறது. இந்தக் கருத்துக்கு அ.தி.மு.க தலைவர்கள் பலரும் பதில் சொல்லி வருகிறார்கள். இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைமையின் கருத்தால் கூட்டணி முறியுமா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
இந்த நிலையில், தமிழக பாஜக-வை, அதிமுக சம்பவம் செய்யும் பின்னணி என்ன?!
மோதல் தொடர்பாக இரு தரப்பிலும் முன்வைக்கப்படும் கருத்துகள் என்ன..?
விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘தனது ரகசியம் வெளிவந்துவிடுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறார் அண்ணாமலை’- போட்டுத்தாக்கும் கடம்பூர் ராஜூ
ஆன்லைன் ரம்மி: ஆளுநர் மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு!
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அரசுக்கே திருப்பியனுப்பியிருப்பதும், இந்தச் சட்டம் கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருப்பதும் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு, எங்கிருந்தோ வந்த அழுத்தத்தால்தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை ஆளுநர் எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
கேலி, கிண்டல்… தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் உமா (35) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கணவரை இழந்த இவர், தன் 9 வயது மகளுடன் வசித்துவருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் வேலைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மசாஜ் சென்டருக்கு உமா மேல்புறம் வழியாகச் செல்லும்போது, அந்தப் பகுதியிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் தினசரி உமாவைக் கேலி, கிண்டல் செய்து வந்திருக்கின்றனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
கன்டெய்னர் தோட்டத்தில் குங்குமப்பூ சாகுபடி… அசத்தும் பொறியாளர்!
இந்தியாவில் காஷ்மீர் போன்ற சில குளிர் பிரதேசங்களில் மட்டுமே குங்குமப்பூ விளைவிக்கப்படுகிறது.
இந்நிலையில்தான் மற்ற பகுதிகளிலும் இதை உற்பத்தி செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார், மகாராஷ்டிரா மாநிலம், புனேயைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளர் சைலேஷ் மோதக்.
இதுகுறித்து அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்தோடு சைலஸ் மோதக்கை சந்திக்கச் சென்றோம்.
கன்டெய்னர் தோட்டத்தில் குங்குமப்பூ சாகுபடி எப்படி சாத்தியமானது..?
இன்று வெளியான பசுமை விகடன் இதழில் சைலஸ் மோதக் பகிரும் அனுபவங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
ஒருவருக்கு எத்தனை முறை ஹார்ட் அட்டாக் வரும்?
Doctor Vikatan: ” ஹார்ட் அட்டாக்கை பொறுத்தவரை முதல் அட்டாக், இரண்டாவது அட்டாக் என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ஒருவருக்கு எத்தனை முறை ஹார்ட் அட்டாக் வரும்?”
சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் முகமது இத்ரீஸ் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
சினிமா விமர்சனம்: அகிலன்
ஒரு துறைமுகத்தின் செயற்பாடுகளையும் அதன் கறுப்பு பக்கங்களையும், த்ரில்லர் மோடில் திரைக்கதை அமைத்துச் சொல்ல `முயன்றிருக்கிறார்’ இயக்குநர் எஸ்.கல்யாண கிருஷ்ணன்.
அகிலனாக ஜெயம் ரவி பொருந்திப்போகிறார். முரடனாக, புத்திசாலியாக, நல்லெண்ணம் கொண்டவராக, அதே சமயம் வெளியே அப்படித் தெரியாதவராக, தன் கதாபாத்திர ஸ்கெட்ச்சுக்கான பணியைக் குறையின்றி செய்திருக்கிறார்.
பிரியா பவானிசங்கர், தான்யா ராஜேந்திரன் என இரு கதாநாயகிகளும் பேருக்கு மட்டும்தான்.
பேசப்படாத கதைக்களம், பேச வேண்டிய அரசியல்; ஆனால் படமாக எப்படியிருக்கிறது?
விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
“அது வாடிவாசல் முடித்த பிறகுதான்..!” – வெற்றி மாறன் பேட்டி
‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் திண்டுக்கல் சிறுமலை பகுதியில் பரபரப்பாக நடந்துகொண்டிருந்போது, படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் வெற்றிமாறன் விகடனுக்காக அளித்த பிரத்யேக நேர்காணல் இது…
படப்பிடிப்பின்போது நிறைய மாற்றங்களை செய்வதாக மணிரத்னம் கூறியிருந்தார். உங்கள் வழக்கம் என்ன ?
விஜய் சேதுபதி வந்தபின் ‘வாத்தியார்’ கதாபாத்திரத்தில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்தீர்கள்?
ஆக் ஷன் காட்சிள் அதிகமிருக்குமா?
நீங்கள் தொடங்கிய ‘IIFC’ கல்வி நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
வாடிவாசல் இயக்கும் போது அடுத்ததாக எந்தக் கதையில் பணியாற்றப் போகிறீர்கள்?
அனைத்து கேள்விகளுக்குமான