வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைதான மணீஷ் சிசோடியாவை மார்ச் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து, மணீஷ் சிசோடியாவை விசாரித்தனர். தொடர்ந்து அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
விசாரணை முடிந்த நிலையில் கடந்த( மார்ச் 06) மணீஷ் சிசோடியா டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதற்கிடையே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நடந்துள்ள பணமோசடியை அமலாக்கத்துறை விசாரித்து மணீஷ்சிசோடிவை கைது செய்தது. இது தொடர்பாக இன்று (மார்ச்.10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 17-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement